Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM

அரசுத் துறைகளில் காலியாக உள்ள - 3.50 லட்சம் பணியிடத்தில் தமிழர்கள் நியமனம் : ஆத்தூர் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசும் மு.க.ஸ்டாலின்.படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக வேட்பாளர்கள் ஆத்தூர்தொகுதி சின்னதுரை, கெங்கவல்லி ரேகா பிரியதர்ஷினி, சங்கராபுரம் உதயசூரியன், ரிஷிவந்தியம்வசந்தம் கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை மணிகர்ணம், கள்ளக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்னம் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அண்மையில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவுக்கு பிரதமரை அழைத்து, அவர்கையால் அடிக்கல் நாட்டப்போவதாக தகவல் அறிந்தேன்.

இது தொடர்பாக பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ரூ.165 கோடியில் காவிரி -குண்டாறு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதனை 2011-ம்ஆண்டு அதிமுக அரசு நிறுத்திவிட்டது.

எனவே, ஏற்கெனவே அடிக்கல் நாட்டப்பட்ட திட்டத்துக்கு மீண்டும் நீங்கள் (பிரதமர்) அடிக்கல் நாட்டினால், மக்கள் கேலி பேசுவார்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டேன். அதனை அறிந்த பிரதமர் தமிழகத்துக்கு வரவில்லை.

‘தி இந்து’ நாளிதழில், ஒவ்வொரு அமைச்சரின் சொத்துகள் எவ்வளவு அதிகரித்துள்ளது என எழுதியிருக்கின்றனர்.

அதில், ஓபிஎஸ்-ன் சொத்து 409 சதவீதமும், அமைச்சர் ராஜலட்சுமியின் சொத்து 359 சதவீதமும், ஆர்.வி.உதயகுமாரின் சொத்து 475 சதவீதமும், செல்லூர் ராஜுவின் சொத்து 415 சதவீதமும், விஜயபாஸ்கரின் சொத்து 576 சதவீதமும், கே.பி.அன்பழகனின் சொத்து 685 சதவீதமும் உயர்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுத் துறையில் காலியாக உள்ள 3.50 லட்சம் பணியிடங்களில், தமிழர்களை மட்டும்நியமிப்போம். மரவள்ளி விவசாயிகளுக்காக ஆத்தூரில், சேலம்சேகோ சர்வ்-ன் கிளை அமைக்கப்படும். கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை இடையே ரயில்பாதை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். தலைவாசல் -கெங்கவல்லி பகுதிகளுக்குமேட்டூர் உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

கள்ளக்குறிச்சி, வாழப்பாடியில் நவீன பேருந்து நிலையம்,கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், சங்கராபுரத்தில் மரவள்ளி தொழிற்சாலை, ரிஷிவந்தியத்தில் நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தப்படும். ரிஷிவந்தியம் தனி வட்டமாக உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x