Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM

தமிழகத்தில் பிப்.27 முதல் 3 நாள் ராகுல் பிரச்சாரம்

தூத்துக்குடி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 27-ம்தேதி முதல் 3 நாட்கள் தென்மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த மாதம் 23-ம் தேதிமுதல் 3 நாட்கள் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். நேற்று முன்தினம் புதுச்சேரியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் 2-ம் கட்ட சுற்றுப்பயணத்தை ராகுல் காந்தி வரும் 27-ம் தேதி தொடங்குகிறார். தொடர்ந்து 3 நாட்கள் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 தென் மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்தூத்துக்குடியில் இன்று (பிப்.19)மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை கொறடா ராமசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய்தத், வல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x