Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM
தூத்துக்குடியில் பாஜக சார்பில் சமுதாயத் தலைவர்கள், பெண்கள்உள்ளிட்ட பல்வேறு அமைப்பி னருடன் கலந்துரையாடல் மற்றும்கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறியதாவது:
தமிழக பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி நேற்று தொடங்கியுள்ளது. எனது கட்டுப்பாட்டில் 14 சட்டப்பேரவை தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் முதல் தொகுதியாக தூத்துக்குடியில் ஆலோசனை நடத்தியுள்ளேன். அடுத்ததாக நாங்குநேரி தொகுதிக்கு செல்கிறேன்.
தமிழகத்தில் மீண்டும் அதிமுகஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசை. அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு பெரியஅளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டதை வைத்து, தமிழகம் முழுவதும் பொதுமக்கள்வரவேற்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது.
அதிமுக - சசிகலா இடையேயான பிரச்சினையில் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை. சசிகலாவின் பலம் என்ன, இதனால் எந்தளவுக்கு பாதிப்பு வரும் என்றெல்லாம் யோசித்து, இந்த பிரச்சினையை அவர்கள்தான் சரிசெய்ய வேண்டும். முதல்வர் பழனிசாமி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி தமிழகத்தில் தொடரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT