Published : 18 Dec 2020 03:17 AM
Last Updated : 18 Dec 2020 03:17 AM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ரஜினியிடம் ஜனவரியில் ஆணையம் விசாரணை

தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த ஒருநபர் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தூத்துக்குடியில் 2018 மே 22-ல் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய 23-ம் கட்ட விசாரணை இன்று நிறைவுபெறுகிறது.

ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் கூறியதாவது: மொத்தம் 586 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 775 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்ட விசாரணை ஜனவரி மாதம் நடைபெறும்.

அப்போது துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர் களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விசாரிக்கப்படவுள்ளனர். ஜனவரி மாதம் நடிகர் ரஜினிகாந்தை விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது. அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x