Published : 12 Dec 2020 03:17 AM
Last Updated : 12 Dec 2020 03:17 AM

கப்பல் மாலுமிகள் ஊதிய ஒப்பந்தம் கையெழுத்து 40% ஊதிய உயர்வுடன், இழப்பீடு தொகையும் உயர்வு தமிழகத்தை சேர்ந்த 25,000 பேர் பயனடைவர்

தூத்துக்குடி

இந்திய கப்பல் உரிமையாளர்கள் மற்றும் அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்க பிரதிநிதிகளுக்கு இடையே 47-வது தேசிய கடல்சார்வாரிய ஒப்பந்தம் கையெழுத்தாகிஉள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல்களில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 25,000 மாலுமிகள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகளுக்கு 10 முதல் 40 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.

இந்தியாவில் சுமார் 1.50 லட்சம்கப்பல் மாலுமிகள் உள்ளனர். இவர்களில் சுமார் 25,000 பேர் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

கப்பல் மாலுமிகளுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் மற்றும் விதிகளில் மாற்றம் செய்வது தொடர்பாக, கப்பல் உரிமையாளர்களுக்கும், அகில இந்திய கப்பல் மாலுமிகளுக்கும் இடையே3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசியகடல்சார் வாரிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்நிலையில், 47-வது தேசிய கடல்சார் வாரியஒப்பந்தம் கடந்த 7-ம் தேதி மும்பையில் கையெழுத்தானது.

இது குறித்து அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்கத்தின் தூத்துக்குடி கிளை பிரதிநிதி தா.ஜூடு தாசன் கூறியதாவது:

47-வது தேசிய கடல்சார் வாரிய ஒப்பந்தம் 2023-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த ஒப்பந்தம் மூலம் வெளிநாடு செல்லும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகள் மற்றும் கீழ் நிலை அதிகாரிகளுக்கு 30 முதல் 40 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும்.

அதுபோல் உள்நாட்டு வர்த்தக கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகள் மற்றும் கீழ்நிலை அலுவலர்களுக்கு 20 சதவீதமும், கரையோர வர்த்தக கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு 7 முதல்10 சதவீதமும் ஊதிய உயர்வுகிடைக்கும். மேலும் பணியின் போது மரணம், உடல் உறுப்புகளைஇழத்தல், காயங்களுக்கான இழப்பீட்டுத் தொகையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x