Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்களிப்பு முக்கியமாக இருக்கும் என மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
மதுரையில் அண்மையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த திமுக பிரமுகர் நல்லமருதுவின் வீட்டுக்குச் சென்ற மு.க.அழகிரி, அவருடைய உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் எனது பங்களிப்பு முக்கியமாக இருக்கும். இம்மாதம் நடைபெறும் ஆதரவாளர்களுடனான கூட்டத்தில் ஆலோசித்து புதிய கட்சி தொடங்குவது பற்றி விரைவில் எனது முடிவை அறிவிப்பேன்.
அமித் ஷாவை நான் சந்திக்கப் போவதாக பரவிய வதந்திபோலதான், எனது மகன் தயாநிதிக்கு திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக வரும் தகவலும். இதுபோன்ற வதந்திகளுக்கு எதுவும் பதில் கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT