Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM

2,488 மின்கம்பம், 108 மின்மாற்றிகள் புயலால் சேதம்

நாமக்கல்

மின் துறை அமைச்சர் தங்கமணி திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிவர்புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 100 %மின் இணைப்பு தரப்பட்டுள்ளது.

சென்னையில் 95 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று (27-ம் தேதி) இரவுக்குள் முழுமையாக மின்சார இணைப்பு கிடைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் மழை வெள்ள நீர் அதிகம் சூழ்ந்து வருகிறது. எனவே, இனிவரும் காலங்களில் பாதிப்புகளைத் தடுக்க புதை வட மின் கம்பிகள் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது.

தற்போதைய கணக்குப்படி, 2,488 மின் கம்பங்கள், 108 மின் மாற்றிகள் பாதிக்கப்பட்டன. மின் துறையை பொறுத்தவரை, நிவர் புயலின் சேத மதிப்பு இதுவரை ரூ.15 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x