Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இசை தரும் ஆச்சா மரங்கள் ஏராளமாக உள்ளன.
வலிமையான ஆச்சா மரத்தில் இருந்து இசை தரும் நாகஸ்வரம் செய்யப்படுகிறது. இது தேக்கு மரத்தை விடவும் கடினமானது. அடர்த்தி மிகவும் அதிகம் என்பதால் நீரில் மூழ்கும். இம்மரங்களை உளியால் செதுக்குவது சிரமம் என்பதால் கதவு, ஜன்னல் போன்றவை செய்ய இம்மரத்தை தச்சர்கள் பயன்படுத்துவதில்லை.ஆச்சா மரம், நீர் தேங்காத இடங்கள், பாறை இடுக்குகள், இறுகிய மண்ணில் வளரும். மழை அதிகம் பெய்யும் இடங்களில் நன்றாக வளரும். இதனால் வனப்பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன. இத்தகைய தன்மையுடைய ஆச்சா மரங்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அதிகளவில் உள்ளன. அவை மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம், விருந்தினர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் காணப்படுகின்றன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: ஆச்சா மரக்கன்றை நடவு செய்ததும் 3 ஆண்டுகள் வரை வளர்ச்சி அதிகம் இருக்காது. வேரின் வளர்ச்சிதான் இருக்கும். நான்காம் ஆண்டில் இருந்து தான் செடி வளர ஆரம்பிக்கும். ஆனால், வேகமாக வளரும். வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. சாதாரணமாக 70 அடி முதல் 80 அடி உயரம் வரை வளரும். இந்த மரம் அனைத்து வகை மண்ணிலும் வளரும். இம்மரத்தின் இலைகள் கால்நடைகளுக்குத் தீவனமாக பயன்படும். இம்மரத்தில் இருந்து காகிதம், நாகஸ்வரம், ரயில் தண்டவாளக் கட்டைகள், உத்திரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கலாம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT