Published : 29 Oct 2021 03:12 AM
Last Updated : 29 Oct 2021 03:12 AM
திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பாலதண்டாயுதம், ஒன்றியச் செயலாளர் தியாகராஜன், விவசாய சங்க பிரமுகர்கள் புலிகேசி, மாரியப்பன், தர்மதாஸ், செல்வமணி, நாகராஜன், செல்வம், சவுரிராஜன், சிவப்பிரகாசம் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கல்யாண சுந்தரபுரம், கள்ளிக்குடி, பெருங்குடி, அடிப்புதுச்சேரி உட்பட மாவட்டம் முழுவதும் விடுபட்டுள்ள கிராமங்களுக்கு 2020-21-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.
சம்பா, தாளடி நெல் சாகுபடிக்கு தேவையான டிஏபி, யூரியா மற்றும் ரசாயன உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT