Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM
கடந்த 400 ஆண்டுகளாக வெயி லில் காய்ந்தும், மழையில் நனைந் தும் கொஞ்சம் கூட துருப்பிடிக்காத தஞ்சாவூர் ராஜகோபாலன் பீரங்கியை உலக அதிசய பட்டியலில் இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் நடைபெற்ற போர்களில் பீரங்கி என்ற ராட்சத ஆயுதத்துக்கு பெரும் பங்கு உண்டு. மொகலாய மன்னர் பாபரின் பீரங்கிப் படையின் முன்பு இந்திய மன்னர்கள் மண்ணைக் கவ்வினார்கள் என்ற வரலாற்று நிகழ்வைத் தொடர்ந்தே இந்த அதிரடி போர் முறை இந்தியாவில் அறிமுகமானது. இரும்பு, பித்தளை போன்ற உலோகங்களாலும், உலோகக் கலவைகளாலும் செய்யப்பட்டு, வரலாற்றைப் புரட்டிப் போட்ட இப்பீரங்கிகள் எஞ்சியுள்ள அரண் மனைகளிலும், கோட்டைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சீனா, இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள 5 பீரங்கிகள் உலகிலுள்ள மிகப்பெரிய பீரங்கிகளாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், இந்தியாவில் 2 பீரங்கிகள் உள்ளன. ஒன்று ஜெய்ப்பூர் ஜெய்கார் கோட்டையில் உள்ள ஜெய்வானா பீரங்கி, மற்றொன்று தஞ்சாவூர் கோட்டையில் உள்ள ராஜகோபாலன் பீரங்கி. மற்ற 4 பீரங்கிகளும் சக்கரங்கள் பொருத் தப்பட்டு, நடமாடும் பீரங்கிக ளாக உள்ள நிலையில், சக்கரம் இல்லாமல் நிலையாக ஒரே இடத் தில் வைக்கப்பட்டுள்ள சிறப்பை உடையது தஞ்சாவூர் பீரங்கி.
இதுகுறித்து சோழ வரலாற்றுப் பேரவைத் தலைவரும், வரலாற்று ஆர்வலருமான என்.செல்வராஜ் கூறியது:
தஞ்சாவூர் அரண்மனை கோட் டைச்சுவரில் அகழிக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள 60 அடி உயர மிகப்பெரிய கருங்கல் கட்டுமானத் தாங்கிகளின் மேல் இந்தப் பீரங்கி அமைக்கப்பட்டுள்ளது. இப்பீரங்கி தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்கர் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எடை 22 டன், நீளம் 26 அடி, வெடிபொருட்கள் வெளியேறும் வாய் 37 அங்குல விட்டம். பீரங்கிகள் வார்ப்பு இரும்பில் செய்யப்பட்ட காலத்தில், இந்தப் பீரங்கி தேனிரும்பில் செய்யப்பட்டிருக்கிறது. 43 நீண்ட இரும்பு பட்டைகளை ஒன்றுடன் ஒன்று பக்கவாட்டில் இணைத்து உட்குழாயும், அதன் மீது 94 இரும்பு வளையங்களைத் தொடராக இணைத்து மேல் குழாயும் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பீரங்கியில், ஒரே சமயத்தில் 1,000 இரும்புக் குண்டுகள், 300 கற்குண்டுகளை வெடிமருந்துகள் கலந்து வெடிக்கச் செய்தால் 3 மைல் தூரத்தில் உள்ள எதிரிகள் கூட்டத்தை தாக்கி, சின்னாபின்னமாக்கி செயலிழக்கச் செய்துவிடும்.
பீரங்கியைத் தூக்க மேல் பகுதி யில் ஒன்றரை அடி விட்டமுள்ள 8 பெரிய இரும்பு வளையங்கள் உள்ளன. கி.பி.1600-1635 காலகட்டத்தைச் சேர்ந்த இந்தப் பீரங்கி, இந்தியாவின் ஜெய்ப்பூர் ஜெய்கார் கோட்டை ஜெய்வானா பீரங்கிக்கு 120 ஆண்டுகள் முற்பட்டதாகும்.
நவீன வெல்டிங் முறையோ, இரும்பை சுத்தப்படும் முறையோ இல்லாத 400 ஆண்டுகளுக்கு முந்தைய இதன் வடிவமைப்பு தஞ்சாவூர் கொல்லர்களின் மிகச் சிறந்த சாதனையாகும். இந்திய தொல்லியல் துறையின் பராமரிப் பில், 400 ஆண்டுகளுக்கும் மேலாக திறந்தவெளியில் வைக் கப்பட்டுள்ள இந்தப் பீரங்கி, வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, பேரிடர்களை கடந்து வந்துள்ளபோதிலும் கொஞ்சம்கூட துருப்பிடிக்கவில்லை. எனவே, இப்பீரங்கியை உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT