Published : 21 Oct 2021 03:06 AM
Last Updated : 21 Oct 2021 03:06 AM
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் ஆணையரான, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று சாட்சியம் அளித்தார்.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
ஆணையத்தின் தலைவர் மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதுவரை, 962 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆணையத்தின் 31-வது கட்ட விசாரணை, ஆணையத்தின் தலைவர் அருணாஜெகதீசன் தலைமையில் நேற்று தொடங்கியது. இதில் ஆஜராக, துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்கள், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்த வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று 8 பேருக்குசம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
திருவள்ளூர் ஆட்சியரும், சம்பவத்தின் போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றியவருமான ஆல்பி ஜான் வர்கீஸ், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 2 பேர் உள்ளிட்ட 4 பேர்ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்களதுவாக்குமூலங்களை ஆணைய அதிகாரிகள் பதிவு செய்தனர். வரும் 26-ம் தேதி வரை 7 நாட்கள் விசாரணை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT