Published : 20 Oct 2021 03:10 AM
Last Updated : 20 Oct 2021 03:10 AM

மாற்றுத்திறனாளிகள் அலைச்சலின்றி : தேனியில் மருத்துவச் சான்று பெற ஏற்பாடு :

ஆண்டிபட்டி: மாற்றுத் திறனாளிகள் அரசின் பல்வேறு சலுகைகளையும், உதவிகளையும் பெற அடையாள அட்டை அவசியம். இதற்காக தேனி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சென்று விண்ணப்பத்தைப் பெற வேண்டும். பிறகு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களின் ஆய்வுக்குப் பிறகு சான்று வழங்கப்படும். இரண்டு இடங்களும் சுமார் 6 கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனை சரி செய்யும் வகையில் விண்ணப்பங்கள் மருத்துவக் கல்லூரியிலேயே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய குழந்தைகள் நலத்திட்ட மருந்தாளுநர் ரஞ்சித்குமார் கூறுகையில், மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஆட்டோவில் அழைத்து வருவதால் பெற்றோருக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது. தற்போது விண்ணப்பங்களும், பரிசோதனையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x