Published : 16 Oct 2021 06:13 AM
Last Updated : 16 Oct 2021 06:13 AM

சிவகங்கை மாவட்டத்தில் - ஹெச்.ராஜா மீது அதிருப்தியில் உள்ள பாஜகவினரை வளைக்கும் திமுக :

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் ஹெச்.ராஜா மீது அதிருப்தியில் உள்ள பாஜகவினரை திமுக தங்கள் பக்கம் வளைத்து வருகிறது. விரைவில் அவர்கள் திமுகவில் இணைய உள்ளனர் என அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியிடம் தோல்வி அடைந்தார்.

இதனால் பாரதிய ஜனதா கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் ஹெச்.ராஜா மீதான அதிருப்தியில் அப்போதைய மாவட்டத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கட்சி தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினர். மேலும் பலர் அக்கட்சியிலிருந்து விலகினர்.

இதையடுத்து செல்வராஜிடம் இருந்து மாவட்டத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாவட்டத் தலைவர் செல்வராஜ், மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் பீட்டர் ஆனந்த் உள்ளிட்டோர், அமைச்சரும் சிவகங்கை மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பனை சந்தித்து திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் விரைவில் தங்களது ஆதரவாளர்களுடன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் விழாவில் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளனர் என்று அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x