Published : 15 Aug 2021 03:27 AM
Last Updated : 15 Aug 2021 03:27 AM
தமிழக அரசு வரலாற்றில் முதல் முறையாக தமிழக சட்டப்பேர வையில் நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, விவசாயிகள் தெரிவித்துள்ள கருத்துகள் வரு மாறு:
காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம்: தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகை யில் தஞ்சாவூரில் தென்னை மதிப்புக் கூட்டு மையம், கரும் புக்கான கொள்முதல் விலை உயர்வு, பனைமரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை வரவேற்கிறோம்.
அதேசமயம், பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,015, சன்ன ரகம் ரூ.2,060-க்கு கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பு போதுமானதல்ல. வேளாண் விஞ் ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந் துரையின்படி விலை நிர்ணயம் செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூ.விசுவநாதன்: கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.150 ஊக்கத்தொகை, காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் மானியம், 3 ஹெச்பி மோட்டார் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம், உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு ஆகிய அறிவிப்புகளை வரவேற்கிறோம். விவசாயிகளுக்கு டீசல் விலை குறைப்பு, அரியலூர் மாவட்டத்தில் முந்திரி தொழிற்சாலை உள்ளிட்ட அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்ற மளிக்கிறது.
காவிரி பாதுகாப்பு விவசாயி கள் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் சுந்தரவிமல்நாதன்: தனித்துவமான பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்த்தால், ஏமாற்றமே கிடைத்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின் போது, விவசாயிகளின் கூட்டுறவு கடன் ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்தபோது, 2016-ம் ஆண்டு குறுகிய கால கடனாக வழங்கப்பட்ட ரூ.470 கோடி மத்திய கால மறுகடனாக நீட்டிக்கப்பட்டது. அந்தக் கடனை தள்ளுபடி செய்வது தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டியக்க மாநில துணைத் தலைவர் ஆர்.சுகுமார்: இயற்கை விவசாயத்தை அதிகரிக்க அதிகளவில் முயற்சிகள் எடுக்கப் படுவதை வரவேற்கிறோம். ஆனால், நெல், கரும்புக்கு எதிர் பார்த்த விலை அறிவிப்பு இல்லை.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன்: சாகுபடி பரப்பை அதிகரிக்க சாகுபடிக்கான நீர் கட்டமைப்பை மேம்படுத்துவது, விவசாய விளைபொருட்களை விற்க சந்தைகளை அதிகப்படுத் துவது போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார்: இலவச மின்சாரத்துக்கு நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. ஆனால், ஏற்கெனவே மின்சார இணைப்பு கேட்டு லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதற்கான அனுமதி பெற 14 வகையான சான்றுகளை சமர்ப்பிக்க கட்டாயப்படுத்துவது தளர்த்தப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT