Published : 09 Jul 2021 03:15 AM
Last Updated : 09 Jul 2021 03:15 AM
விபத்தில் உயிரிழந்த காவலர் ஒருவரின் மனைவி விருதுநகர் எஸ்.பி. அலுவலகத்தில் மண் ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
வில்லிபுத்தூர் அருகே உள்ள மங்காபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். மம்சாபுரம் காவல் நிலை யத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பழனியம்மாள்(41). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள் ளனர். கடந்த 8 மாதங்களுக்கு முன் கிருஷ்ணன்கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் காவலர் முருகன் உயிரிழந்தார். அதை டுத்து சக காவலர்கள் சார்பில் பழனியம்மாளுக்கு ரூ.8 லட்சம் நிதி உதவி அளித்தனர்.
அப்பணத்தை, மதுரை மாவட்டம் பேரையூரில் வைத்து சென்னை ஆயுதப்படை காவ லராகப் பணியாற்றி வரும் தனது தம்பி மனைவி பரமேஸ்வரியிடம் கொடுத்துள்ளார். தற்போது செவிலியர் பயிற்சிக் கல்லூரியில் படித்து வரும் தனது மகளுக்கு கட்டணம் செலுத்துவதற்காக பழனியம்மாள் பணத்தை திருப்பிக் கேட்டபோது பரமேஸ்வரி கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பழனி யம்மாள் புகார் அளித்துள்ளார். பணம் கொடுத்தது பேரையூர் என்பதால் பேரையூரில் புகார் அளிக்குமாறு போலீஸார் கூறி யுள்ளனர். பின்னர், மதுரை மாவட்டம் பேரையூர் காவல் நிலையத்திலும் பழனியம்மாள் புகார் அளித்துள்ளார்.
நடவடிக்கை எடுக்கப்படாததால் கடந்த மாதம் 22-ம் தேதி விருதுநகர் எஸ்.பி. அலுவலகத்திலும் பழனி யம்மாள் புகார் அளித்துள்ளார். சில நாட்களுக்கு முன் வில்லி புத்தூர் டிஎஸ்பி அலுவலகத்திலும் பழனியம்மாள் புகார் அளித்துள் ளார்.
எங்கும் நடவடிக்கை எடுக்கப் படாததால் பழனியம்மாள் தனது மகளுடன் விருதுநகரில் உள்ள எஸ்.பி. அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அங்கு, மண்ணெண் ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீ ஸார் பழனியம்மாளை தடுத்து நிறுத்தினர். பின்னர், சூலக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT