Published : 30 Jan 2021 03:16 AM
Last Updated : 30 Jan 2021 03:16 AM
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் நூற்றாண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். 160 பேருக்கு ரூ.2 கோடியில் கடனுதவி வழங்கி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச் சந்திரன் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “மறைந்த ராம் தலைமையில் சேஷாசலம், மருத்துவர் அரிகரன், சுப்ரமணியன், கோதண்டராமன் ஆகியோர் கூட்டாக செயல்பட்டு ஆரணி கூட்டுறவு நகர வங்கியை பதிவு செய்து செயல்பட அரும் பாடுபட்டார்கள்.
150 உறுப்பினர்களுடன் ரூ.10 ஆயிரம் பங்கு மூல தனத்துடன் தொடங்கியது. இந்த வங்கிக்கு 10 ஆயிரம் சதுரடி இடத்தை வழங்கிய மறைந்த லிங்கப்பனை நினைவு கூற வேண்டும். மறைந்த பட்டாபிராமன் தலைவராக பொறுப்பேற்று, கடந்த 1960 முதல் 30 ஆண்டுகள் வங்கியின் வளர்ச்சிக்கு செயல்பட்டுள்ளார். அதன் பிறகு, தனி அலுவலர்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
ஏழை, எளிய மக்கள், சிறு வணிகர்கள், நெசவாளர்களுக்கு நகைக்கடன், வீட்டு வசதி கடன், சிறுவணிக கடன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன்களை வழங்கி சிறப்பாக செயல்படு கிறது. பொதுத்துறை வங்கி களுக்கு இணையாக நவீன மயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் 4,030 உறுப்பினர்களுக்கு ரூ.34.56 கோடி கடனுதவி வழங்கப் பட்டுள்ளது.
தற்போது, 8,958 உறுப்பினர் களுடன் ரூ.3.03 கோடி பங்குத் தொகையுடன் வங்கியானது சிறப்பாக செயல்படுகிறது. 15,260 வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.73.28 கோடி நிரந்தர வைப்புத் தொகை பெறப்பட்டுள்ளது. ஆரணி கூட்டுறவு நகர வங்கி செயல்பட தொடங்கிய காலம் முதல் நிகர லாபத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2019-20-ம் நிதியாண்டில் ரூ.41.66 லட்சம் நிகர லாபம் பெற் றுள்ளது. இதற்காக பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்” என்றார்.
இதையடுத்து, ஆரணி கூட்டுறவுநகர வங்கியின் வளர்ச்சிக்காக செயல்பட்டவர்கள், மூத்த உறுப்பி னர், நீண்ட கால வைப்புதாரர், கடன் தொகையை தவணை தவறாமல் செலுத்திய வாடிக்கையாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகியோரை கவுரவித்து அமைச்சர் நினைவு கேடயம் வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT