Published : 01 Jan 2021 07:54 AM
Last Updated : 01 Jan 2021 07:54 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் 1457 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப் பட்டன.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் 307 பேருக்கு அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை, மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி,மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் மகேந்திரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி பேசியதாவது:
கடந்த 17-ம் தேதி முதல் 10 ஒன்றியங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், மாற்றுத் திறனாளி களுக்கு எலும்பு முறிவு, கண், காது, மூக்கு, தொண்டை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, ஊத்தங்கரை ஒன்றியத்தில் 134 பேர், மத்தூரில் 114, பர்கூரில் 136, காவேரிப்பட்டணத்தில் 119, வேப்பனப்பள்ளியில் 87, சூளகிரியில் 120, ஓசூரில் 305, அஞ்செட்டியில் 72, கெலமங்கலத்தில் 131 மற்றும் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 239 பேர் என மொத்தம் 1457 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ் வாறு ஆட்சியர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சூசைநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், சர்தார், வட்டார கல்வி அலுவலர்கள் வேதா, மரியரோஸ் உட்பட மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோதண்டபாணி, ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் செய் திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT