Published : 12 Nov 2021 03:17 AM
Last Updated : 12 Nov 2021 03:17 AM
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் அரசின் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடையும் காலாண்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
10-ம் வகுப்பு (தேர்ச்சி, தோல்வி) மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவை தொடர்ந்து புதுப்பித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து, வேலைவாய்ப்புக்கு காத்திருப்போர் இத்திட்டத்தில் பயன்பெறலாம். மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தை சேர்ந்தவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை விண்ணப்பபடிவம் பெற வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நேரில் வந்து சமர்ப்பிக்கக் வேண்டும் என்று தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT