Published : 02 Nov 2021 03:12 AM
Last Updated : 02 Nov 2021 03:12 AM
தமிழகத்தில் நுகர்பொருள் வாணி பக் கழகத்தில் உள்ள 48 ஆயிரம் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன என்று மாநில உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
திருவாரூரில் நேற்று நடை பெற்ற திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்று, அவர் பேசியது:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றை திமுக கூட்டணி இழந்தி ருந்தாலும், தமிழக முதல்வரின் செயல்பாடுகளால் உள்ளாட்சித் தேர்தலில் 4 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். திருவா ரூர் மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு பலன்களில் உள்ள குறைபாடு களுக்கு தக்க தீர்வு காணப்படும்.
தமிழகத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள 48 ஆயிரம் காலிப் பணி யிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடன டியாக விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் ஒரே நேரத்தில் அனைத் துப் பொருட்களும் தடையின்றி கிடைக்கவும், பொருட்களை பொட் டலங்களாக விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக, கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் சித்த மல்லி சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்எல்ஏ வரவேற்றார். மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு, முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கார்த்தி, ராமகிருஷ்ணன், கலை வாணி, இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, ஒன்றியச் செயலாளர் தேவா உள் ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT