Published : 29 Oct 2021 03:11 AM
Last Updated : 29 Oct 2021 03:11 AM

தீபாவளியையொட்டி மானாமதுரையில் 2,000 ஆடுகள் விற்பனை :

மானாமதுரை: மானாமதுரையில் வியாழன்தோறும் ஆட்டுச் சந்தை நடக்கிறது. நவ.4-ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் நேற்று சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளாடு, செம்மறி ஆடு என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. ஆடுகளை வாங்க உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். மேலும் ஆடுகளின் விலையும் அதிகரித்திருந்தது. ஒரு ஆடு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விலைபோனது.

இது குறித்து ஆடு வியாபாரிகள் கூறுகையில், ‘அடுத்த வாரத்தில் தீபாவளி வருவதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் விலை அதிகரித்ததோடு, விற்பனையும் அதிகரித்தது. மொத்தம் 2 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகின,’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x