Published : 27 Oct 2021 03:09 AM
Last Updated : 27 Oct 2021 03:09 AM
அருப்புக்கோட்டை அருகேயுள்ள கஞ்ச நாயக்கன்பட்டி லட்சுமி நகரைச் சேர்ந்தவர் கணேசன்(78). ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். ரியல் எஸ்டேட் தொழி செய்கிறார். இவரது மனைவி கனகம்மாள். 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். கணேசன் மட்டும் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கணேசன் வீட்டுக்கு காரில் வந்த 5 பேர் இடம் விற்பனை தொடர்பாக பேசுவதாகக் கூறி வீட்டினுள் நுழைந்தனர். பின்னர், அவரைக் கட்டிப்போட்டு, பீரோவில் இருந்த ரூ.4.25 லட்சம், 5 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பினர்.
இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT