Published : 20 Oct 2021 03:11 AM
Last Updated : 20 Oct 2021 03:11 AM
திருச்சி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்துவதற்கான கால அவகாசம் அக்.22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையையொட்டி, திருச்சி மாவட்டத்தில் புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்யவும் மற்றும் இருப்பு வைத்துக் கொள்ளவும் உரிமம் கோருவோர், தங்கள் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008-க்கு உட்பட்டு, உரிய ஆவணங்களுடன் செப்.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக்.22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT