Published : 03 Oct 2021 03:13 AM
Last Updated : 03 Oct 2021 03:13 AM
தஞ்சாவூர்/ திருவாரூர்/ நாகப்பட்டினம்/ காரைக்கால்/ திருச்சி/ கரூர்
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் நேற்று அவரது சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சா வூர் மாவட்ட பூமாலை வணிக வளாகத்தில் உள்ள கதர் விற்பனை நிலையத்தில் காந்தி படத்துக்கு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து, கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாந கராட்சி அலுவலகம் மற்றும் வடக்கு வீதியில் உள்ள காந்தி சிலைகளுக்கு மாவட்டத் தலைவர் டி.கிருஷ்ணசாமி வாண்டையார், துணைத் தலைவர் அன்பரசன் உள்ளிட்டோர் மாலை அணிவித் தனர். கும்பகோணம் உச்சிப்பிள் ளையார் கோயில் அருகில் உள்ள காந்தி சிலைக்கு எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் மாலை அணிவித்தார்.
புதுச்சேரி அரசு சார்பில் காரைக்கால் வட்டார வளர்ச்சி அலு வலகத்தில் காந்தியின் படத்துக்கு ஆட்சியர் அர்ஜூன் சர்மா மலர் தூவி, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு, காரைக்கால் அம்மாள் சத்திரம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கும் ஆட்சியர் அர்ஜூன் சர்மா, மண்டல காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரகு நாயகம் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் மாலை அணிவித்தார். திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் காந்தியின் படத்துக்கு ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் மாலை அணிவித்து, கதர் சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்தார்.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
மாநகர் மாவட்டத் தலைவர் ஜவகர் தலைமையில், கோவிந் தராஜ் முன்னிலையில், கட்சியின் பொதுச் செயலாளர்கள் எம்.சரவ ணன், முரளி, முன்னாள் மேயர் சுஜாதா, பொருளாளர் ராஜா நசீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பெல் பொது மேலா ளர்(பொ) எஸ்.வி.னிவாசன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
கரூர் லைட்ஹவுஸ் ரவுண்டானா வில் உள்ள காந்தி சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த காந்தி படத்துக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ம.சின்னசாமி உள்ளிட்டோரும், பாஜக சார்பில் பாஜக மாவட்டத் தலைவர் கே.சிவசாமியும் மாலை அணிவித் தனர். கரூர் ரயில் நிலையத்தில் காந்தி படத்துக்கு ரயில் நிலைய அலுவலர் ராஜராஜன் மாலை அணிவித்து, மரியாதை செலுத் தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT