Published : 03 Oct 2021 03:13 AM
Last Updated : 03 Oct 2021 03:13 AM

காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு :

காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் ரங்கோலியில் காமராஜரின் படத்தை மாணவிகள் வரைந்து விளக்குகள் ஏற்றி மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி/ திருநெல்வேலி/ தென்காசி

கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் காமராஜரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே பழனிசெல்வம் தலைமை வகித்தார். பள்ளி இலக்கிய மன்ற மாணவ, மாணவிகள், காமராஜரின் உருவ ரங்கோலியை வரைந்து, 46 அகல் விளக்குகளை ஏற்றி மரியாதை செலுத்தினர். கலை இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன், சமூக தணிக்கைவட்டார வள அலுவலர் முத்துமுருகன், பள்ளி பொருளாளர் ஐயப்பன், பள்ளி தலைமையாசிரியர் செல்வி, நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி பொருளாளர் ரத்தின ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் காமராஜர் நினைவு தினத்தையொட்டி சந்திப்பு ரயில் நிலையம் முன்புள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடிஆதித்தன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமாகா சார்பில் மாவட்ட தலைவர் முருகேசன், பாஜக சார்பில் மாவட்ட தலைவர் மகாராஜன், மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் கேஎம்ஏ நிஜாம், தேமுதிக சார்பில் மாவட்டச் செயலாளர் மீனாட்சிசுந்தரம், அமமுக சார்பில் மாவட்டச் செயலாளர் பரமசிவன், சமக சார்பில் மாநில துணை பொதுசெயலாளர் சுந்தர் ஆகியோர் தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

தென்காசி

காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன், எம்எல்ஏக்கள் ராஜா, சண்முகையா, முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தென்காசி கீழ ரத வீதியில் உள்ள காந்தி சிலைக்கு தென்காசி தொகுதிஎம்எல்ஏ எஸ்.பழனி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x