Published : 30 Sep 2021 07:46 AM
Last Updated : 30 Sep 2021 07:46 AM
அக்.1-ம் தேதி முதல் நெல் விற்பனை செய்ய விவசாயிகள் முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நெல் பயிரிடும் விவசாயிகள், அறுவடை செய்யும் முன்பாக அதுகுறித்து ஆன்லைனில் பதிவு செய்த பின்னர், கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண் மைத் துறையினர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தினர் ஒப்புதல் வழங்கிய பிறகே, நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என்ற புதிய நடைமுறை அக்.1-ம் தேதி (கொள்முதல் பருவ தொடக்கம்) முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று அனைத்து வட்டாரங்களிலும் விவசாயிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் களுக்கு ‘நெல் கொள்முதலுக்கு முன் எவ்வாறு ஆன்லைனில் பதிவு செய்வது' என பயிற்சி அளிக்கப்பட்டது.
தஞ்சாவூரில் நடைபெற்ற பயிற் சியில், விவசாயிகள் நெல்லை அறுவடை செய்யும் முன்பாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டிய நடைமுறைகள், கிராம நிர்வாக அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அப்போது, விவசாயிகள் நெடார் வி.தருமராஜன், ராயமுண்டான் பட்டி வெ.ஜீவக்குமார், பாச்சூர் ஆர்.பாஸ்கர் ஆகியோர் பேசும் போது, “சிறு, குறு விவசாயிகள் இன்னும் பலர் ஸ்மார்ட் போன் இல்லாமல் உள்ளனர். அவர்கள் எப்படி ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். பதிவு செய்த பின், கிராம நிர்வாக அலுவலர், வேளாண்மை துறையினர் கள ஆய்வு செய்த பிறகே அறுவடை செய்ய வேண்டும் என்கின்றனர். ஆனால், மழை போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்யமுடியும்.
எவ்வளவு மகசூல் கிடைக்கும் என்பதை எப்படி முன்கூட்டியே கணக்கிட முடியும். அதிகாரிகள் நேரில் கள ஆய்வு செய்வது என்பது, அவர்களது பணிச் சுமையை அதிகரிக்கும், இதனால் அறுவடை காலம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
அதேபோல, அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து குவிப்பதை தடுக்க தான் இந்த நடைமுறை. இதனால், விவசாயி களுக்கு எந்த பயனும் இல்லை. வியாபாரிகள் பயனடைய தான் இந்த புதிய நடைமுறை வழி வகுக்கும். எனவே, இந்த புதிய நடைமுறையை அமல்படுத்தக் கூடாது. பழைய முறையிலேயே நெல் கொள்முதல் செய்ய வேண்டும்” என்றனர்.
பின்னர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் என்.உமாமகேஸ்வரி பேசியது: விவசாயிகள் கொள் முதல் நிலையத்தில் காத்திருக் காமல் அவர்களுக்கு ஒதுக்கப் படும் நாளில் நெல்லை கொண்டு வந்தால் உடனடியாக கொள்முதல் செய்யலாம். இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டால், வியாபாரிகள் கொள்முதல் நிலை யங்களுக்கு நெல்லை விற்பனை செய்ய கொண்டு வருவது தடுக் கப்படும். அந்தந்த கிராமப் பகுதி களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதால், விவசாயிகள் அலைய வேண்டியிருக்காது.
அதேபோல, அறுவடை தொடங் குவதற்கு முன்பாக, முன்கூட்டியே விவசாயிகள் பதிவு செய்யும்போது, அந்த பகுதியில் கொள்முதலுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT