Published : 19 Sep 2021 03:17 AM
Last Updated : 19 Sep 2021 03:17 AM

புதுப்பாளையம் அருகே - முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை : 5 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

திருவண்ணாமலை

செங்கம் அடுத்த புதுப்பாளையம் அருகே முன்விரோதம் காரணமாக பரோட்டா மாஸ்டரை கொலை செய்த 5 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வீரானந்தல் கிராமத்தில் வசித்தவர் வெங்க டேசன்(27). செங்கம் மற்றும் புதுப்பாளையத்தில் உள்ள உணவ கங்களில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர், வீரானந்தல் கிராமத்தில் வசிக்கும் நண்பர் தருமனுடன்(27) நேற்று முன்தினம் இரவு, புதுப்பாளையம் அருகே உண்ணாமலைபாளையத்தில் உள்ள தரைபாலம் அருகே நடந்து சென்றுள்ளார்.

காவல் துறையினருக்கு தகவல்

அப்போது அவரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயூதங்களால் வெட்டியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தருமன், அங்கிருந்து தப்பித்து சென்று புதுப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் இருந்த வெங்க டேசனை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

ஆயுதங்கள் பறிமுதல்

இது குறித்து புதுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து புதுப்பாளையத்தில் வசிக் கும் மதுசூதனன்(35), அவரது தம்பி சுரேஷ்(35), நண்பர்கள் ஏழுமலை(26), வல்லரசு(24), வினோத்(24) ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒருவரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, “கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற எருதுவிடும் விழாவில் வெங்கடேசன் மற்றும் மதுசூதனன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் வெங்கடேசன் வெட்டியதில் மதுசூதனனின் இடது கை துண்டானது. இதனால், இரண்டு தரப்புக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

மேலும் தனக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில், வெளியூர்களில் வெங்கடேசன் தங்கி உள்ளார். கரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக சொந்த கிராமத்துக்கு வந்துள் ளார். அவரது நடமாட்டத்தை கண்காணித்து, வெட்டி கொலை செய்து மதுசூதனன் தரப்பினர் பழித் தீர்த்து கொண்டனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x