Published : 17 Sep 2021 03:11 AM
Last Updated : 17 Sep 2021 03:11 AM
நெய்வேலி கீழ் வடக்குத்து பகுதியைச் சேர்ந்தவர் கோபி (28). இவர் மீது கொலை,கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பத்துக்கும்மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கோபிக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி வீரமணிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. வீரமணி மீதும்பல்வேறு வழக்குகள் உள்ளன. இருவரும் நெய்வேலி காவல் நிலைய குற்றப் பதிவேட்டில் உள்ளனர்.
இருவரும் தொடர்து போலீஸா ரால் கண்காணிக்கப்பட்டு வருகின் றனர். கடந்த 3.12.2020 அன்று கோபியை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
தண்டணை காலம் முடிந்தவுடன் கோபி வெளியே வந்தார். இதற் கிடையே ரவுடி வீரமணியை கடந்தஆகஸ்ட் மாதம் 28-ம் தேதிபோலீஸார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். அவர் தற்போது சிறையில் உள்ளார்.
இதனை பயன்படுத்திக் கொண்ட கோபி தன் கூட்டாளி களுடன் சேர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரமணியின் கூட்டாளிகள் சதீஷ், விமல்ராஜ், அப்பு மற்றும் மூன்று நபர்களை கடத்திச் சென்று அவர்களை முட்டிபோட வைத்து சரமாரியாக கட்டையால் தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரின் அடைப்படையில் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார் கோபியின் கூட்டாளிகள் 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கோபி போலீ ஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். கோபி கோயம் புத்தூரில் இருப்பதை அறிந்து, இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீஸார் நேற்று முன் தினம் அங்கு சென்று கோபியை பிடிக்க முயன்றனர். கோபி மோட்டார் சைக்கிளில் கத்தியுடன் தப்பி ஓடியுள்ளார்.
பேலீஸார் அவரை மடக்கி பிடிக்கும் போது மோட்டார் சைக்கிளையும், கத்தியையும் போட்டு விட்டு அப்பகுதியில் இருந்த மதில்சுவர் ஏறி குதிக்கும் போது அவரு டைய வலது கால் மற்றும் உடலில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அவரை பிடித்து கைது செய்து கைது செய்த போலீஸார், அவரை மாவு கட்டு போட்டு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT