Published : 05 Sep 2021 03:16 AM
Last Updated : 05 Sep 2021 03:16 AM
விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
மாவட்ட குற்றப் பதிவேடுக் கூடம் துணை காவல் கண் காணிப்பாளர் முத்துராஜ் தலை மையில், 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள் அருகில், போதைப்பொருள் விற்பனை யைத் தடுக்கும் நோக்கில் தீவிர கண்காணிப்பு நடக்கிறது.
பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருள் விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து இக்குற்றச் செயல்களில் ஈடு படுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT