Published : 28 Aug 2021 03:14 AM
Last Updated : 28 Aug 2021 03:14 AM

கால்வாயில் பாலம் கட்ட எதிர்ப்பு கல்லல் அருகே விவசாயிகள் போராட்டம் :

வாரிவயல் கிராமத்தில் வரத்துக் கால்வாயில் பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்த விவசாயிகள்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே பொய்யலூர் ஊராட்சி வாரிவயல் கிராமத்தில் உள்ள கண்மாய் மூலம் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாய்க்கான வரத்துக் கால்வாய் செல்லும் பகுதியில் உள்ள தனியார் நிலத்தை மனையிடங்களாக மாற்றி விற்பனை செய்ய ஏற்பாடு நடக்கிறது. இதற்காக வரத்துக் கால்வாயில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதையடுத்து வாரிவயல் விவசாயிகள் வரத்துக் கால்வாயின் அகலத்தை சுருக்கி பாலம் அமைப்பதால், தண்ணீர் வரத்து பாதிக்கப்படும் என தேவகோட்டை கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தனர். நடவடிக்கை இல்லாதநிலையில் நேற்று பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x