Published : 25 Aug 2021 03:17 AM
Last Updated : 25 Aug 2021 03:17 AM

தென் மாவட்டங்களில் நிழல் இல்லாத நாட்கள் ஆக.26 முதல் 3 நாட்கள் பார்க்கலாம் :

மதுரை: தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ராஜேஷ் கூறியதாவது: சூரியன் தலைக்கு மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். இவ்வாறு பூஜ்ஜியமாகும் நாளே ‘’நிழல் இல்லாத நாள்’’ எனப்படுகிறது. நிழல் இல்லாத நாள் வரும் 26-ம் தேதி திண்டுக்கல்லில் பிற்பகல் 12.20 மணிக்கும், பெரியகுளம், கொடைக்கானலில் பிற்பகல் 12.22 மணிக்கும் நடக்கிறது.

ஆகஸ்ட் 27-ம் தேதி தேனி, கம்பம், போடி, சின்னமனூா் ஆகிய இடங்களில் 12.22 மணிக்கும், மதுரையில் 12.19 மணிக்கும், உசிலம்பட்டி, திருமங்கலத்தில் 12.20 மணிக்கும், மேலூர், சிவகங்கையில் 12.18 மணிக்கும், காரைக்குடி, தேவகோட்டையில் 12.16 மணிக்கும் நடக்கிறது.

ஆக.28-ம் தேதி விருதுநகரில் 12.19 மணிக்கும், பரமக்குடியில் 12.17 மணிக்கும், கமுதியில் 12.18 மணிக்கும், ஆர்எஸ் மங்கலத்தில் 12.16 மணிக்கும், சிவகாசியில் 12.20 மணிக்கும், ராஜபாளையம், வில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய இடங்களில் 12.21 மணிக்கும், கூடலூாில் 12.20 மணிக்கும் நடக்கிறது. மதுரையில் இந்த நிகழ்வுகளைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கள் பகுதிக்கு எந்த நேரத்தில் நிழலில்லா தினம் தெரியும் என்பதை அறிய https://alokm.com/zsd.html என்கிற இணைப்பை பயன்படுத்தவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x