Published : 25 Aug 2021 03:18 AM
Last Updated : 25 Aug 2021 03:18 AM

புதை சாக்கடை, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உட்பட - மன்னார்குடி நகராட்சிக்கு 3 முக்கிய திட்டங்கள் அறிவிப்பு : வர்த்தகர்கள், திமுகவினர், பொதுமக்கள் மகிழ்ச்சி

மன்னார்குடியில் நேற்று முன்னாள் அமைச்சர் மன்னை நாராயணசாமி சிலைக்கு மாலை அணிவித்து, தமிழக அரசுக்கும் எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜாவுக்கும் நன்றி தெரிவித்து முழக்கமிட்ட திமுகவினர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியின் வளர்ச்சிக்குத் தேவை யான புதை சாக்கடை, ஒருங்கி ணைந்த பேருந்து நிலையம் உட்பட 3 முக்கிய திட்டங்கள் நேற்று நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக் கப்பட்டுள்ளன. இதற்கு வர்த்தகர் கள், திமுகவினர், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மன்னார்குடி நகரின் 45 ஆண்டு கால கோரிக்கையான இருந்த புதை சாக்கடைத் திட்டம், மன்னார் குடி நகர பகுதி விரிவாக்கம், ஒருங் ணைந்த பேருந்து நிலையம் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதையடுத்து, மன்னார்குடி பேருந்து நிலையத்தில் நகர திமுக செயலாளர் வீரா.கணேசன் தலைமையில் மன்னை நாராயண சாமி சிலைக்கு மாலை அணிவித்த திமுகவினர், தமிழக முதல்வர், அமைச்சர் கே.என்.நேரு, எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கோஷமிட்டனர். தொடர்ந்து, பட்டாசுகளை வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங் கினர்.

வர்த்தக சங்கத் தலைவர்ஆர்.வி.ஆனந்த், பொதுச் செய லாளர் ஏ.பி.அசோக் ஆகியோர் தலைமையில் திரண்ட வர்த்தகர் கள் எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜாவுக்கு நன்றி தெரிவித்து முழக்கமிட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னார்குடி நகராட்சியின் மொத்த பரப்பளவு 11.55 சதுர கி.மீ. 33 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகையும் கொண்ட இந்த நகராட்சியை விரிவுபடுத்தக் கோரி 20 ஆண்டு களாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். புதை சாக்கடைத் திட்டத்தை மன்னார்குடி முழுவதும் விரிவுபடுத்தப்படும் என 2007-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அறிவிக் கப்பட்டது. அதன்பின்னர் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தற்போது அந்த திட்டம் மீண்டும் அறிவிக்கப் பட்டுள்ளது.

மன்னார்குடியில் தற்போதுள்ள காமராஜர் பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை பேருந்து நிலை யம் ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த பேருந்து நிலை யமாக்க வேண்டும் என 20 ஆண்டு களாக அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், மன்னார்குடி மக்களின் முக்கிய 3 கோரிக்கைக ளையும் நிறைவேற்றும் அறிவிப்பு நேற்று வெளியானதால், அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

இதுகுறித்து- மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி.ராஜா கூறியது:

மக்களின் இந்த மகிழ்ச்சிக்காக 10 ஆண்டுகாலம் போராடியுள்ளேன். மன்னார்குடி நகர விரிவாக்கத்தில் அஷேசம், மேலவாசல் மற்றும் மூவாநல்லூர் வரையிலான பகுதி கள் இணைய உள்ளன. மன்னார் குடி நகரின் வளர்ச்சிக்கான 3 முக்கிய அறிவிப்புகளை ஒரேநா ளில் வெளியிட்டதற்கு மக்கள் தொடர்ந்து திமுகவின் மீது வைத் துள்ள நம்பிக்கையே காரணம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x