Published : 22 Aug 2021 03:15 AM
Last Updated : 22 Aug 2021 03:15 AM
திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாஜகவினரிடம் விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி மன்னார்குடியில் நேற்று நடைபெற்றது. குறிப்பாக, மன்னார்குடி நகராட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டது.
நிகழ்ச்சியில், விருப்ப மனுவை பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் வி.கே.செல்வம் பெற்றுக்கொண்டார். மன்னார்குடி நகரத் தலைவர் ரகுராமன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் பால.பாஸ்கர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மன்னார்குடியில் உள்ள 33 வார்டுகளிலும் போட்டியிட கட்சியினர் விருப்ப மனு அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT