Published : 22 Aug 2021 03:15 AM
Last Updated : 22 Aug 2021 03:15 AM
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: குறு, சிறு மற்றும் நடுத்தரதொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் கடனுதவி வழங்கி வருகிறது.
தூத்துக்குடி போல்பேட்டை என்.பி.எஸ்.வணிக வளாகத்தில் இருக்கும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு தொழில் கடன் மேளா கடந்த 18-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 27-ம் தேதிவரை நடைபெறுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும். முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொதுகடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். என்.இ.இ.டி.எஸ். திட்டத்துக்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு தொழில் கடன் மேளா கடந்த 18-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT