Published : 21 Aug 2021 07:01 AM
Last Updated : 21 Aug 2021 07:01 AM
விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி தடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் அனந்தராமன் (45).
அனந்தராமன் கடந்த 2006 முதல் 2016 வரை வச்சக்காரப்பட்டி ஊராட்சித் தலைவராக பொறுப்பு வகித்தவர். 2016-ல் இந்த ஊராட்சி தனி ஊராட்சியானது. தற்போது ஊராட்சி துணைத் தலைவராக அனந்தராமன் பொறுப்பு வகித்து வந்தார். மேலும் ஒப்பந்த அடிப்படையில் டாஸ்மாக் லாரிகளும் இயக்கி வந்தார்.
இந்நிலையில், தன்னிடம் பணியாற்றும் குருசாமி என்பவரது திருமணம் தடங்கம் கிராமத்தில் நேற்று காலை நடைபெற்றது.
திருமணத்துக்கு வந்த அனந்தராமன் மணமக்களை வாழ்த்திவிட்டு தனது காரில் ஏறுவதற்காக சாலைக்கு வந்தபோது, இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் அனந்தராமனை கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
ஊராட்சி நிர்வாகம் தொடர்பாக அனந்தராமன், ஊராட்சி தலைவர் ஜெயபண்டியம்மாளின் கணவர் பாலமுருகன் என்பவருக்கும் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அனந்தராமனை கூலிப்படையை ஏவி கொலை செய்தது யார் என்பது குறித்து வச்சக்காரபட்டி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT