Published : 14 Aug 2021 03:22 AM
Last Updated : 14 Aug 2021 03:22 AM
தமிழகத்தில் 6 கி.மீ. தொலைவுக்கு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்குவதற்கான அறிவிப்பு தமிழக வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என நம்புவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தெரி வித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷை சந்தித்து மாவட்டத்தில் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி நேற்று காலை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு வலியுறுத்தினார்.
பின்னர் அவர், செய்தியாளர் களிடம் கூறும்போது, “ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், அரசு அறிவித்தபடி ரூ.1,960-க்கு விற்பனை செய்ய வேண்டிய 100 கிலோ நெல் மூட்டையை ரூ.900 – ரூ.1,000 வரை என விலையை நிர்ணயம் செய்து வியாபாரிகள் வாங்குகின்றனர்.
எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை, திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 இடங்களில் திறக்க வலியுறுத்தி யுள்ளோம்.
செங்கம் அடுத்த பெரிய கோளாப் பாடி கிராமத்தில் குளம் உள்ள பகுதி, சிப்காட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த குளத்தை கொடுக்கக் கூடாது என வலி யுறுத்தியுள்ளோம். எங்களது கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வியாபாரிகளின் குறுக்கீடு இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதன்முறையாக வேளாண் துறைக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது மகிழ்ச்சி. விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கவும், தமிழகம் முழுவதும் 6 கி.மீ. தொலைவுக்கு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப் பதற்கான அறிவிப்பு இடம்பெறும் என நம்புகிறோம். ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500, ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் கொடுப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.
மரபணு விதைகள் கூடாது
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை வழங்கக்கூடாது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தமிழகத்தில் இறக்கு மதி செய்யப்படாது என்ற அறி விப்பும் இடம்பெற வேண்டும். கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், டெல்டா சாகுபடி அழிந்துவிடும்” என்றார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT