Published : 05 Aug 2021 03:18 AM
Last Updated : 05 Aug 2021 03:18 AM
சேலம் மாவட்ட ஊரகம் மற்றும் நகரப் பகுதிகள், மாநகராட்சி பகுதிகள் உள்ளிட்ட 244 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் இன்று (5-ம் தேதி) நடக்கிறது.
சேலம் மாவட்டத்தில் ஊரகபகுதிகளில் மொத்தம் 49 மண்டலங்களில் 184 காய்ச்சல் பரிசோதனை முகாம்களும், நகரப் பகுதிகளில் 4 மண்டலங்களில் 12 முகாம்களும், சேலம் மாநகராட்சி பகுதிகளில் 16 மண்டலங்களில் 48 பகுதிகள் என மொத்தம் 69 மண்டலங்களில் 244 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் இன்று (5-ம் தேதி) நடைபெறவுள்ளது. இத்தகவலை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுப்ரமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT