Published : 28 Jul 2021 03:17 AM
Last Updated : 28 Jul 2021 03:17 AM

விருதுநகர் ஒன்றியக் கூட்டத்தில் : கவுன்சிலர்கள் வெளிநடப்பு :

விருதுநகர்: விருதுநகர் ஊராட்சி ஒன்றிக்குழுக் கூட்டம், அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கவுன்சிலர்கள் 24 பேரில் 23 பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 97 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

அப்போது, ஒன்றியக்குழு கவுன்சிலர்களுக்கு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை எனக் கூறியும், 97 தீர்மானங்களிலும் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனக்கூறியும் தீர்மானங்களில் கையெழுத்திடாமல் கவுன்சிலர்கள் 17 பேர் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x