Published : 23 Jul 2021 07:15 AM
Last Updated : 23 Jul 2021 07:15 AM

கரோனாவால் உயிரிழந்த - கல்லூரி ஊழியர்களின் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் :

கரோனாவால் உயிரிழந்த திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி ஊழியர்களின் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிய கல்லூரி இல்ல தந்தை ஜான் அலெக்ஸாண்டர். அருகில், கல்லூரி முதல்வர் மரிய ஆண்டனிராஜ் உள்ளிட்டோர்.

திருப்பத்தூர்

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனியார் கல்லூரி ஊழியர்களின் குழந்தை களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவித்தொகை நேற்று வழங் கப்பட்டது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியை கலையரசி மற்றும் அலுவலக ஊழியர் சிவக்குமார் ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தனர்.

இதையடுத்து, அவர்களது குடும்பம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியது. இந்நிலையில், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் நிதியுதவி அளிக்க முன்வந்தனர். அதன் மூலம் நிதி திரட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிவக்குமார் மற்றும் கலையரசியின் குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளா கத்தில் நேற்று நடைபெற்றது.

கல்லூரியின் இல்ல தந்தை முனைவர் ஜான் அலெக்ஸாண்டர் தலைமை வகித்து, குழந்தைகள் பிரதீக்ஷா, கீர்த்திகா, லக்சணா மற்றும் பிரணவி ஆகியோரிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.

மேலும், அலுவலக ஊழியரான சிவக்குமாரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் கல்லூரி யில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை கல்லூரி முதல்வர் மரிய ஆண்டனிராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில், கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x