Published : 19 Jun 2021 03:14 AM
Last Updated : 19 Jun 2021 03:14 AM
அரசுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர் களுக்கு, நடப்பு ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக நிர்ணயித்து, அமல்படுத்த வேண்டுமென ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியருக்கு, ஏஐடியுசி ஈரோடு மாவட்டத் தலைவர் எஸ்.சின்ன சாமி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சித்துறை, மருத்துவத் துறை, தொழிலாளர்துறை, அரசு வேளாண்மை பண்ணை உள்ளிட்டஅரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் ஆயிரக்கணக் கானோர் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆண்டுதோறும் மாவட்ட ஆட்சியரால் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2020-21-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியரால் நிர்ணயிக்கப் பட்ட குறைந்த பட்ச ஊதியத்தை பவானி, கோபி, சத்தியமங்கலம், புளியம்பட்டி ஆகிய நகராட்சி களிலும், பெருந்துறை - அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவ மனைகளிலும் அவுட் சோர்சிங் முறையில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இதுவரை அமலாக்கவில்லை.
அதோடு, ஊரக உள்ளாட்சிஅமைப்புகளிலும் நிர்ணயிக்கப் பட்ட குறைந்த பட்ச ஊதியம் அமலாக்கப்படுவதில்லை. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.
எனவே, அரசுத்துறைநிறுவனங்களில், ஆட்சியர் நிர்ண யித்த குறைந்தபட்ச ஊதியத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், விலைவாசி உயர் வின் அடிப்படையில் கணக்கிடப் பட்ட நடப்பாண்டுக்கான (2021-2022) அகவிலைப்படி உயர்வை தொழிலாளர் துறை வெளி யிட்டுள்ளது. அதனடிப்படையில், 2021-22-ம் ஆண்டுக்கான மாவட்ட குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்தி நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.
கரோனா தொற்று காலத்தில் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிவரும் முன்களப் பணியாளர்களான உள்ளாட்சி மற்றும் மருத்துவத்துறை பணியாளர் களின் உன்னதமான பணியை அங்கீ கரிக்கும் வகையில் அவர்களுக்கு விரைவில் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயித்து, அதனைமாவட்ட அரசிதழில் வெளியிடுவ தோடு, அதனை அனைத்து அரசுத் துறைகளிலும் அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT