Published : 19 Jun 2021 03:15 AM
Last Updated : 19 Jun 2021 03:15 AM
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத் திய முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கு திருக்குறள் தொண்டு மையம் பாராட்டு தெரிவித் துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் 2 நாள் பயணமாக டெல்லிக்கு நேற்று முன்தினம் சென்றார். இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வாக பிரதமர் மோடியை சந்தித்து, தமிழகத்தின் வளர்ச் சிக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்துள்ளார்.
தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு
அதில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு, பல்வேறு தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
திருக்குறளை ஓதி திருமணங்கள்
இது குறித்து தி.மலையில்செயல்படும் திருக்குறள் தொண்டு மையம் நிறுவனர் பாவலர் ப.குப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக பொது மறையாம் திருக்குறளை உலகமே வணங்கி வரவேற்கிறது. 1,330 திருக்குறள்களையும் படித்து, அதில் கூறப்பட்டுள்ள பொருள்படி அனைவரும் வாழ்ந்து வந்தால், உலகம் பசுமையாகும். திருக்குறளை ஓதி திருமணங்கள் நடைபெறு கிறது.இத்தகைய பெருமைக்குரிய திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளதை திருக்குறள் தொண்டு மையம் பணிந்து பாராட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT