Published : 26 May 2021 03:15 AM
Last Updated : 26 May 2021 03:15 AM
திருச்சி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் இலவசமாக கோடை உழவு செய்து கொள்ள பதிவு செய்து கொள்ளுமாறு வேளாண்மைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து முசிறி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பா.நளினி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் இலவசமாக கோடை உழவு செய்து கொள்ள அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு,குறு விவசாயிகள் இந்த திட்டத்தில் முன்பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம்.
தற்போது நிலவி வரும் கரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், விவசாயப் பணிகள் பாதிக்காத வகையில் வேளாண்மைத்துறை, தமிழ்நாடு டிராக்டர் மற்றும் பண்ணை இயந்திரங்கள் நிறுவனத்தின் மூலம் சிறு,குறு விவசாயிகளுக்கு அடுத்த 60 நாட்களுக்கு இலவசமாக கோடை உழவு செய்து கொடுக்க முன்வந்துள்ளது.
விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் 1800 4200 100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது உழவன் செயலி மூலம் தங்களது முழு விவரங்களை பதிவேற்றம் செய்து கொண்டு முன்பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு முசிறி வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறு,குறு விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில்...
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த சேவையைப் பயன்படுத்தி உழவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள், 1800 4200 100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, டாபே நிறுவனத்தின் மாவட்ட பொறுப்பு அலுவலர் கார்த்திகேயனை 63821 21323 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT