Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் - கரோனா பரவலை தடுக்க கட்டுப்பாட்டு மண்டலங்கள் : சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வேகமாக பரவி வருகிறது. தினமும் 500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகள், கரோனா பாதுகாப்பு மையங்கள் மற்றும் வீடுகளில் 4,000-க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதிகள் நுண் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தூத்துக்குடி புறநகர் பகுதியில் 12 நுண் கட்டுப்பாட்டு மண்டலங்கள், வல்லநாடு வட்டாரத்தில் 2 மண்டலங்கள், வைகுண்டம் வட்டாரத்தில் 13 மண்டலங்கள், ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் 17 மண்டலங்கள், உடன்குடி வட்டாரத்தில் 4 மண்டலங்கள், சாத்தான்குளம் வட்டாரத்தில் 3 மண்டலங்கள், கோவில்பட்டி வட்டாரத்தில் 153 மண்டலங்கள், ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் 13 மண்டலங்கள், புதூர் வட்டாரத்தில் 4 மண்டலங்கள், கயத்தாறு வட்டாரத்தில் 32 மண்டலங்கள், விளாத்திகுளம் வட்டாரத்தில் 17 மண்டலங்கள் என, மொத்தம் 270 நுண் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன.

இந்த பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பது, கபசுர குடிநீர் வழங்குவது மற்றும் காய்ச்சல் முகாம்கள் நடத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x