Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிட்ட - கிருஷ்ணசாமி உட்பட 107 பேர் டெபாசிட் இழப்பு :

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி உட்பட 107 வேட்பாளர்கள் காப்புத் தொகையை இழந்தனர். 13 வேட்பாளர்கள் மட்டுமே காப்புத் தொகையை திரும்ப பெறும் அளவுக்கு வாக்குகளை பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் மொத்தம் 120 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வேட்பாளர்கள் தாங்கள் செலுத்திய காப்புத் தொகையை திரும்பபெற தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் மாவட்டத்தில் 13 வேட்பாளர்கள் மட்டுமே காப்புத்தொகையை திரும்ப பெறும் அளவுக்கு வாக்குகளை பெற்றுள்ளனர். மீதமுள்ள 107 வேட்பாளர்களும் காப்புத் தொகையை இழந்துள்ளனர்.

விளாத்திகுளம் தொகுதியில் காப்புத் தொகையை திரும்ப பெற 27,688 வாக்குகள் பெற வேண்டும். இத்தொகுதியில் போட்டியிட்ட 15 வேட்பாளர்களில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன், அதிமுக வேட்பாளர் சின்னப்பன் ஆகிய 2 பேர் மட்டுமே இந்த வாக்குகளை தாண்டி பெற்றுள்ளனர். மற்ற 13 பேரும் காப்புத் தொகையை இழந்துள்ளனர்.

தூத்துக்குடி தொகுதியில் காப்புத் தொகையை திரும்ப பெற 31,139 வாக்குகள் பெற வேண்டும். இத்தொகுதியில் போட்டியிட்ட 26 வேட்பாளர்களில் திமுக வேட்பாளர் கீதாஜீவன், தமாகா வேட்பாளர் விஜயசீலன் ஆகிய 2 பேர் மட்டுமே இந்த வாக்குகளை தாண்டி பெற்றுள்ளனர். மற்ற 24 பேரும் காப்புத் தொகையை இழந்துள்ளனர்.

திருச்செந்தூர் தொகுதியில் காப்புத் தொகையை திரும்ப பெற 28,913 வாக்குகள் பெற வேண்டும். இத்தொகுதியில் போட்டியிட்ட 15 வேட்பாளர்களில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் கேஆர்.எம்.ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேர் மட்டுமே இந்த வாக்குகளை தாண்டிபெற்றுள்ளனர். மற்ற 13 பேரும்காப்புத் தொகையை இழந்துள்ளனர்.

வைகுண்டம் தொகுதியில் காப்புத் தொகையை திரும்ப பெற 27,397 வாக்குகள் பெற வேண்டும். இத்தொகுதியில் போட்டியிட்ட 21 வேட்பாளர்களில் காங்கிரஸ் வேட்பாளர் அமிர்தராஜ், அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் ஆகிய 2 பேர் மட்டுமே இந்த வாக்குகளை தாண்டி பெற்றுள்ளனர். மற்ற 19 பேரும் காப்புத் தொகையை இழந்துள்ளனர்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் காப்புத் தொகையை திரும்ப பெற29,378 வாக்குகள் பெற வேண்டும். இத்தொகுதியில் போட்டியிட்ட 17 வேட்பாளர்களில் திமுக வேட்பாளர் சண்முகையா, அதிமுக வேட்பாளர் மோகன் ஆகிய 2 பேர் மட்டுமேஇந்த வாக்குகளை தாண்டி பெற்றுள்ளனர். மற்ற 15 பேரும் காப்புத் தொகையை இழந்துள்ளனர். இந்த தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி 6,544 வாக்குகளை மட்டுமே பெற்று காப்பு தொகையை இழந்துள்ளார்.

கோவில்பட்டி தொகுதியில் காப்புத் தொகையை திரும்ப பெற 30,154 வாக்குகள் பெற வேண்டும். இத்தொகுதியில் போட்டியிட்ட 26 வேட்பாளர்களில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ, அமமுக வேட்பாளர் தினகரன், மார்க்சிஸ்ட் வேட்பாளர் சீனிவாசன் ஆகிய 3 பேர் மட்டுமே இந்த வாக்குகளை தாண்டி பெற்றுள்ளனர். மற்ற 23 பேரும் காப்புத் தொகையை இழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x