Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

தூத்துக்குடியில் : ஆயுதங்களுடன் 6 பேர் கைது :

தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பின்புறம் போலீஸார் ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் இருந்தனர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த லட்சுமணன் (29), கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (39), தாளமுத்துநகரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற விக்கி(20), கண்ணன் (23), தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்த மாரிபிரபாகரன் (20) , தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த சின்னத்துரை (40) என்பது தெரியவந்தது.

6 பேரும் கைது செய்யப்பட்டனர். 2 அரிவாள், 2 கத்தி, கம்பி போன்ற ஆயுதங்கள் மற்றும் வேன் பறிமுதல் செய்யப்பட்டன.

வடபாகம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x