Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
வேலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கரோனா பாதுகாப்பு நடை முறைகள் கட்டாயம் பின்பற்றப் படுவதுடன் முகவர்கள் முழு உடல் கவச உடையை அணிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே-2-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளன. தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி என 3 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும் காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன.
சுற்றுகள் விவரம்
349 வாக்குச்சாவடிகள் உள்ள காட்பாடி தொகுதியில் 25 சுற்றுகளாகவும், 364 வாக்குச் சாவடிகள் உள்ள வேலூர் தொகுதியில் 26 சுற்றுகளாகவும் 351 வாக்குச்சாவடிகள் உள்ள அணைக் கட்டு தொகுதியில் 26 சுற்று களாகவும், 311 வாக்குச்சாவடிகள் உள்ள கே.வி.குப்பம் தொகுதியில் 23 சுற்றுகளாகவும், 408 வாக்குச் சாவடிகள் உள்ள குடியாத்தம் தொகுதியில் 30 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
தபால் வாக்குகள்
தபால் வாக்குகள் எண்ணுவ தற்காக ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 3 மேஜை கள் அமைக்கப்பட்டு எண்ணப்பட வுள்ளன. அதேபோல், ராணுவ வீரர்கள் ஆன்லைனில் செலுத்தி யுள்ள வாக்குகளை எண்ணுவ தற்காக காட்பாடி, அணைக்கட்டு மற்றும் கே.வி.குப்பம் தொகுதியில் தலா மூன்று மேஜைகளும் வேலூர் மற்றும் குடியாத்தம் தொகுதியில் தலா ஒரு மேஜையும் அமைக்கப்பட்டுள்ளன.வேலூர் மாவட்டத்தில் வழங் கப்பட்ட 20,282 தபால் வாக்குகளில் இதுவரை 12 ஆயிரத்து 407 தபால் வாக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இது 61.85 சதவீதமாகவும். மீதமுள்ள 7,875 தபால் வாக்குகள் நாளை (மே-2-ம் தேதி) காலை 7.59 மணிக்குள் வந்து சேர வேண்டும். நாளை காலை 8 மணிக்கு பிறகு வரும் தபால் வாக்குகள் எண்ணப்படாது.
காட்பாடி தொகுதியில் 3 ஆயிரத்து 252 தபால் வாக்குகள், வேலூர் தொகுதியில் 2,475, அணைக்கட்டு தொகுதியில் 2,601, கே.வி.குப்பம் தொகுதியில் 2,349, குடியாத்தம் தொகுதியில் 1,730 தபால் வாக்குகள் பெறப் பட்டுள்ளன. இதில், 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து 2,460 தபால் வாக்குகளும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து 483 தபால் வாக்குகளும் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராணுவ வீரர்களுக்கு அனுப்பப்பட்ட 6,733 மின்னணு தபால் வாக்குகளில் 1,930 வாக்குகள் வரை பெறப் பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் அதிகபட்சமாக 20 முகவர்கள் நியமிக்கப்படுவார்கள். அதன்படி, காட்பாடியில் 390 பேர், வேலூரில் 408 பேர், அணைக்கட்டில் 338 பேர், கே.வி.குப்பத்தில் 260 பேர், குடியாத்தத்தில் 360 பேர் என மொத்தம் 1,756 பேர் முகவர்களாக பங்கேற்கவுள்ளனர்.
வாக்கு எண்ணும் மேஜைக்கு அருகில் உள்ள முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற வர்கள் வாக்கு எண்ணும் மைய நுழைவு வாயிலில் தங்களது செல்போன்களை ஒப்படைக்க வேண்டும்.
கரோனா பாதுகாப்பு
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் வேலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள், வேட்பாளர்கள், முதன்மை முகவர்கள், வாக்கு எண்ணும் மேஜை முகவர்கள், ஊடகத்தினர் என மொத்தம் 4,319 பேருக்கு கரோனா உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படும். இதில், பேஸ் ஷீல்ட், முகக்கவசம், கையுறைகள், சானிடைசர் பாட்டில் இருக்கும். வாக்கு எண்ணும் பணிக்கு வரும் அனைவரும் கட்டாயம் கரோனா தொற்று இல்லை என்ற சான்றை கட்டாயம் அளித்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும்.ஏற்கெனவே வேட்பாளர்கள் தரப்பில் இருந்து முகவர்களாக பணியாற்ற உள்ளவர்களின் பட்டியல் கோரப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்தவும் அல்லது ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மொத்தம் 1,896 பேரில் 1,030 பேர் கரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இவர்களில் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசியை இரண்டு தவணைகளில் செலுத்தி யவர்களுக்கு மட்டுமே கரோனா பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முகவர்கள் ஒரு தவணை கரோனா தடுப்பூசி போட்டிருந்தாலும் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.
கரோனா தடுப்பு பணி
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரி வளாகத்தின் பிரதான நுழைவு வாயிலில் ஒரு மருத்துவர் மற்றும் 3 செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் பணியில் இருப்பார்கள். அப்போது, ஒரு செவிலியர் உடல் வெப்பநிலையை சோதிப்பார். இதில், உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அவர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். இரண்டாவது செவிலியர் சானிடைசர் வழங்குவார். மூன்றாவது செவிலியர் பேஸ் ஷீல்ட், முகக்கவசம், கையுறைகள், சானிடைசர் பாட்டிலை வழங்குவார். நுழைவு வாயிலுக்கு அருகில் கைகளை சோப்பால் சுத்தம் செய்து உள்ளே சென்றதும் அவர்களுக்கு உரிய இருக்கைகளில் அமர வேண்டும்.முகவர்கள் முழு உடல் கவச உடையை அணிந்துகொள்ள வேண்டும். பயன்படுத்தப்பட்ட முகக்கவசம், கையுறை, முழு கவச உடை உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 10 எண்ணிக்கையிலான குப்பைத் தொட்டிகள் வழங்கப்படும். மேலும், கரோனா நடைமுறைகளை கண்காணிக்க ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கணினி குலுக்கல் முறை
முன்னதாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை தேர்தல்-2021 வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. இதில், தேர்தல் பார்வையாளர்கள் முகமது அப்துல் அசீம், சித்தரஜ்ஜன் குமார், விபுள் உஜ்வால், சத்தியவாணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT