Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM

காரியாபட்டி அருகே ஒரே குடும்பத்தில் - தாய், மகள், பேத்தி தற்கொலை :

முனியம்மாள்

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஒரே குடும்பத்தில் தாய், மகள், பேத்தி விஷம் குடித்து தற்கொலை செய்தனர்.

காரியாபட்டி அருகே முஷ்டக்குறிச்சியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. 7 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி முனியம்மாள் (45). பெட்டிக்கடை நடத்தினார். இவருக்கு 2 மகன்கள், மகள் ஜெயலலிதா (16) உள்ளனர். முனியம்மாள் வீட்டின் அருகே அவரது தாயார் அடைக்கலம் (70) வசித்தார்.

மகன்கள் கூலி வேலை செய்கின்றனர். மகள் 10-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு கிழவ னேரியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கு மகளைத் திருமணம் செய்துள்ளனர்.

நேற்று காலை அக்கம்பக்கத்தி னர் முனியம்மாள் கடைக்கு வந்தபோது அவர் கடையைத் திறக்கவில்லை. கதவைத் தட்டி பார்த்தபோதும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது முனியம்மாளும், மகளும் இறந்து கிடந்தனர். பக்கத்து வீட்டில் பாட்டி அடைக்கலமும் இறந்து கிடந்தார்.

ஆவியூர் போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் மூவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும், முனி யம்மாளுக்கும் அப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருந்ததாகவும், இப்பிரச்சினை யால் மூவரும் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

2 நாள்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு ஜெயலலிதா வந்துள் ளார். அதனால், வரதட்சணை கொடுமை காரணமாக இருக்க லாமோ எனவும் விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x