Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM

சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே - சாலையில் வீசப்பட்ட முகக்கவசங்கள் : கரோனா தொற்று பரவும் அபாயம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சாலையோரத்தில் கிடக்கும் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள்.

சிவகங்கை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சுற்றிலும் பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள் குவிந்து கிடக்கின்றன. அவை முறைப்படி அப்புறப் படுத்தப்படாமல் உள்ளதால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புறநோயாளியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். உள் நோயாளிகளாக 700-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். நோயாளி களை பார்ப்பதற்காக நாள்தோறும் ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மாணவர்கள் என 800-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

தற்போது கரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதோருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவ மனைக்கு வந்து செல்வோர், தாங்கள் பயன்படுத்திய முகக் கவசங்களை முறைப் படி குப்பைத்தொட்டியில் போடா மல், ஆங்காங்கே தரையில் வீசிச் செல்கின்றனர். இதனால் மருத் துவமனை வளாகம் முழுவதும் முகக்கவசங்கள் குப்பையாக குவிந்துள்ளன. குறிப்பாக மானாமதுரை சாலையில் இருந்து மருத்துவக் கல்லூரி செல்லும் வரையுள்ள சாலையின் இருபுறமும் முகக்கவசங்கள் பரவிக் கிடக்கின்றன. இதனால் கரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று முகக்கவசங்களை கீழே வீசிச் செல்வோரை கண் காணித்து அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது சாலையில் குவிந்துள்ள முகக் கவசங்களை உடனடியாக அகற்ற மருத்துவமனை நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும். இப்பகுதியில் கூடுதல் குப்பைத்தொட்டிகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x