Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு - மக்கள் ஒத்துழைக்க வேண்டும் : தூத்துக்குடி எஸ்பி வேண்டுகோள்

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே ஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு எஸ்பி ஜெயக்குமார் அறிவுரைகள் வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது கரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளை காவல் துறையினர் மேற்கொண்டனர். காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே வாகன ஓட்டிகளை நிறுத்தி ஆலோசனை வழங்கியதுடன், கபசுர குடிநீர் விநியோகம் செய்தார்.

அங்கு எஸ்பி பேசியதாவது: கரோனா தொற்றின் 2-வது அலைதற்போது தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் பொருட்டுதமிழக அரசு பல்வேறு நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம். தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

உணவகங்களில் பார்சல்சேவை மட்டுமே அனுமதிக்கப் படுகிறது. அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. திரையரங்குகள், பெரியவணிக வளாகங்களை திறப் பதற்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார். டிஎஸ்பி கணேஷ், வடபாகம் காவல் உதவி ஆய்வாளர்கள் ஆர்தர் ஜஸ்டின், ராமலிங்கம், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x