Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM

ரூ.80 லட்சம் அபராதம் வசூல் :

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு ரூ.200, சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

வருவாய் துறையினர், பொது சுகாதாரத்துறையினர், காவல் துறையினர், தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி மற்றும் காயல்பட்டினம் நகராட்சி, பேரூராட்சி பணியாளர்கள் இந்த அபராதங்களை வசூலித்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் மட்டும் முகக்கவசம் அணியாத 1,296 பேரிடம் ரூ.2,59,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 37,747 பேரிடம் ரூ.75,48,400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சமூக இடைவெளியை பின்பற்றாத 20 பேரிடம் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை 893 பேரிடம் ரூ.4,46,500 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிக கூட்டம் இருந்ததாக நேற்றுமுன்தினம் ஒரு இடத்தில் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுவரை 5 இடங்களில் ரூ.2,500 வசூலிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x