Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் - இன்று காய்ச்சல் சிறப்பு முகாம்கள் :

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்.26) காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

அதன் விவரம்:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை ராஜீவ் நகர், அழகேசபுரம் (அங்கன்வாடி மையம்), எஸ்.எஸ்.மாணிக்கபுரம், வள்ளிநாயகபுரம், வண்ணார் 4-வது தெரு (மாநகராட்சி பள்ளி) ஆகிய பகுதிகளிலும், காலை 11 மணி முதல் 1 மணி வரை ஆசிரியர் காலனி 2-வது தெரு, செல்வவிநாயகபுரம் (பத்திரகாளியம்மன் கோயில் அருகில்), பூபால்ராயபுரம் 2-வது தெரு, லெவிஞ்சிபுரம் (அங்கன்வாடி மையம்), எஸ்.பி.ஜி. கோயில் தெரு பகுதிகளிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை சின்னமணிநகர் (அங்கன்வாடி மையம்), போல்பேட்டை கிழக்கு (முருகன் ஹால் அருகில்), முத்துகிருஷ்ணாபுரம் 2-வது தெரு, கரிக்குளம் காலனி (அங்கன்வாடி மையம்), போல்டன்புரம் 3-வது தெரு (அங்கன்வாடி மையம்) ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

நகராட்சிகள்

கோவில்பட்டி நகராட்சியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை வ.உ.சி நகர் பகுதியிலும், காலை 11 மணி முதல் 1 மணி வரை செக்கடி தெரு பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை கடலைகாரத்தெரு பகுதியிலும், காயல்பட்டிணம் நகராட்சியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நெய்னா தெரு பகுதியிலும், காலை 11 மணி முதல் 1 மணி வரை தைக்காத் தெரு பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை மகதும் தெரு பகுதியிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஊராட்சிகள்

மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை கூட்டாம்புளி, உமரிக்காடு, ஆறாம்பண்ணை, மேலப்பூவாணி, திருச்செந்தூர் புளியடியம்மன் கோயில் தெரு, ஆழ்வார்திருநகரி மாசித் தெரு, நரசன்விளை, கல்லாமொழி, கிறிஸ்தியா நகர், கரையான்குடியிருப்பு, நெடுங்குளம் (அங்கன்வாடி), கோவில்பட்டி முத்துநகர், டி.என்.குளம், செட்டிக்குறிச்சி, குருமலை, அருணாசலபுரம், ஒட்டநத்தம், மாசார்பட்டி ஆகிய பகுதிகளிலும், 11 மணி முதல் 1 மணி வரை குலையன்கரிசல், முக்காணி, வல்லநாடு பார்வதியம்மன் கோயில் தெரு, கலியாவூர், திருச்செந்தூர் மேலரதவீதி, ஆழ்வார்திருநகரி தெற்கு மாடத் தெரு, குச்சிக்காடு, குலசேகரன்பட்டினம் வடக்கூர், சுல்தான்புரம், சாத்தான்குளம் செட்டியார் நடுத்தெரு, நெடுங்குளம் காலனி, கோவில்பட்டி ராஜீவ்நகர், ராஜாபுதுக்குடி, திருமங்கலகுறிச்சி, கழுகாசலபுரம், நமச்சிவாயபுரம், பரிவில்லிக்கோட்டை, மேலகரந்தை ஆகிய பகுதிகளிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை முடிவைத்தானேந்தல், கொற்கை, வசவப்பபுரம், உழக்குடி, திருச்செந்தூர் பாரதியார் தெரு, மூக்குப்பேறி, புன்னக்காயல், மாதவன்குறிச்சி, பெருமாள்புரம், சாத்தான்குளம் செட்டியார் தெற்குத்தெரு, ஆர்.சி.கோயில் தெரு, நெடுங்குளம், கோவில்பட்டி எஸ்.எஸ்.நகர், சவலாப்பேரி, வெள்ளாளன்கோட்டை, கடம்பூர், வள்ளிநாயகபுரம், மணியாச்சி, கீழக்கரந்தை ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 என்ற தொலைபேசி எண்ணிலும், 9486454714 என்ற செல்போன் எண்ணிலும் பொதுமக்கள் கரோனா நோய்த் தொற்று குறித்த தகவல்களை கேட்டு பெறலாம் என, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x